/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோவில் திருவிழாவில் நடனம் 5 பேர் மீது போலீசார் வழக்கு
/
கோவில் திருவிழாவில் நடனம் 5 பேர் மீது போலீசார் வழக்கு
கோவில் திருவிழாவில் நடனம் 5 பேர் மீது போலீசார் வழக்கு
கோவில் திருவிழாவில் நடனம் 5 பேர் மீது போலீசார் வழக்கு
ADDED : ஜூன் 11, 2024 07:03 AM
கள்ளக்குறிச்சி: வி.மாமாந்துாரில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்த நடன நிகழ்ச்சியில், முகம் சுழிக்கும் வகையில் நடனமாடியது தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கீழ்குப்பம் அடுத்த வி.மாமாந்துார் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து, தினமும் சிறப்பு பூஜை, சுவாமி வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வி.மாமாந்துார் மந்தைவெளி அருகே ஆடல், பாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில், நீதிமன்ற வழிகாட்டுதலை மீறி ஆபாச பாடல் ஒளிபரப்பியும், பொதுமக்கள் முகம் சுழிக்கும் வகையில் நடன நிகழ்ச்சியும் நடந்தது.
இதையடுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தலைவாசலை சேர்ந்த இருசன் மகன் சரவணன், விருகாவூரை சேர்ந்த நடராஜன் மகன் தாமோதிரன், வி.மாமாந்துார் ஊராட்சி தலைவர் மாயாண்டி, ஊராட்சி துணைத்தலைவர் வீரமுத்து மகன் சம்பத், தர்மகர்த்தா வடிவேல் ஆகிய 5 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.