ADDED : மார் 03, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ்நிலையத்தில் 'பைக்' திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுாரை சேர்ந்தவர் தண்டபாணி,56; இவர் கடந்த, 27ம் தேதி தன்னுடைய 'பைக்'கில் கள்ளக்குறிச்சி பஸ்நிலையம் சென்றார். அங்குள்ள நகராட்சி கழிப்பறைக்கு அருகே பைக்கை நிறுத்தி விட்டு வெளியே சென்றார். சிறிது நேரத்திற்கு பின் வந்து பார்த்த போது, அவரது பைக்கை காணவில்லை.
இதனால், அதிர்ச்சியடைந்து பல்வேறு இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை. இது குறித்து கள்ளக்குறிச்சி போலீஸ்நிலையத்தில், புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.