/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மின்மாற்றியில் ஆயில் திருட்டு போலீஸ் விசாரணை
/
மின்மாற்றியில் ஆயில் திருட்டு போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 14, 2024 07:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மின்மாற்றியில் ஆயில் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் கிராமத்தில் உள்ள மின்மாற்றியில் ஆயில் திருடு போனதாக சடையம்பட்டு உதவி மின் பொறியாளர் வினோத்குமாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், மின் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு சோதனை செய்ததில் மின்மாற்றியில் இருந்த 375 லிட்டர் ஆயிலை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.
இதன் மதிப்பு 75 ஆயிரம் ரூபாய் ஆகும்.
இது குறித்து வினோத்குமார் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.