/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நுாறு நாள் வேலையில் குறைவான சம்பளம் கிராம மக்கள் மறியலால் போக்குவரத்து பாதிப்பு

ADDED : செப் 14, 2024 07:55 AM

கள்ளக்குறிச்சி: கூத்தக்குடியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் குறைவான சம்பளம் வழங்குவதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கூத்தக்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி செய்தவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுவதாக புகார் தெரிவித்து, 150க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள் கள்ளக்குறிச்சி - வேப்பூர் சாலையில், கூத்தக்குடி புதுக்காலனி பஸ்நிறுத்தம் அருகே நேற்று காலை 9.30 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவலறிந்த தியாகதுருகம் பி.டி.ஓ., செந்தில்முருகன், வரஞ்சரம் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜ்குமார், ஜெகதீசன் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
அதில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்கள் தினமும் இரண்டு முறை வருகையை பதிவு செய்ய வேண்டும், என்.எம்.எம்.எஸ்., என்ற செயலி மூலம் வருகை கணக்கெடுக்கப்படுவதால், காலதாமதமாக வந்தாலும், ஒரு முறை பதிவு செய்யாமல் விட்டாலும் ஊதியம் கிடைக்காது, எனவே குறிப்பிட்ட நேரத்திற்குள் பணிக்கு வர வேண்டும் என பி.டி.ஓ., செந்தில்முருகன் தெரிவித்தார்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் காலை 10.30 மணியளவில் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்புக்குள் ளானது.