/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
/
கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
கோழிக்குஞ்சு வழங்கும் திட்டம்: விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஆக 05, 2024 12:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 50 சதவீதம் மானியத்தில் நாட்டின கோழிக் குஞ்சுகள் வழங்கும் திட்டத்திற்கு ஆர்வமுள்ள பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கலெக்டர் பிரசாந்த் செய்திக் குறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழ்மை நிலை, கணவனை இழந்த மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு நாட்டின கோழிக் குஞ்சுகள் (ஒரு பயனாளிக்கு 40 கோழி குஞ்சுகள் வீதம்) 50 சதவீதம் மானியத்தில் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 100 பயனாளிகள் வீதம் 900 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.
கோழிகள் வளர்ப்பில் விருப்பமுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
பயனாளி சொந்த செலவில் 3,200 ரூபாய் கொள்முதல் செய்திட திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.
சுயசான்று வழங்கிய ரசீது சமர்ப்பித்தவுடன் 50 சதவீதம் மானியம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
பயனாளிகள் ரேஷன் கார்டு, ஆதார், ஜாதிச்சான்று நகல்கள், கணவனால் கைவிடப்பட்ட, விதவை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர் என்பதற்கான சான்று, 2 புகைப்படம், வங்கி கணக்கு புத்தக முதல் பக்க நகல் ஆகியவற்றுடன் அரசு கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து வரும் 23ம் தேதிக்குள் வழங்க வேண்டும். மேலும் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் உரிய ஆணவங்களுடன் ஒப்படைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.