கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, சிதம்பரேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமி மற்றும் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
இதேபோல கள்ளக்குறிச்சி கமலா நேரு தெரு-நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர்; சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர்; சோமண்டார்குடி சோமநாதீஸ்வரர்; முடியனுார்- தென்கீரனுார் அருணாச்சலேஸ்வரர்; வீரசோழபுரம் அர்த்தநாரீஸ்வரர்; தண்டலை சுயம்பு நாதேஸ்வரர்; ஏமப்பேர் விஸ்வநாதேஸ்வரர்; கரடிசித்துார் விருத்தகிரீஸ்வரர்; அரியபெருமானுார் ஆத்மஞான லிங்கேஸ்வரர்; ஆலத்துார் திருவாலீஸ்வரர்; பல்லகச்சேரி ராமநாதீஸ்வரர்; ஆகிய கோவில்களிலும் வழிபாடு நடந்தது. தென்பொன்பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அலங்காரம், நந்தீஸ்வரருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
மேலும் சின்னசேலம் கங்காதீஸ்வரர், ராயர்பாளையம் குமாரதேவர் மடம் பழமலைநாதர், கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.