நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : நைனார்பாளையம் அருகே தந்தை கண்டித்ததால் மனமுடைந்த கர்ப்பிணி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சின்னசேலம் அடுத்த நைனார்பாளையத்தை சேர்ந்தவர் ஸ்டாலின் மனைவி ரஞ்சிதா,24; இருவருக்கும் கடந்த மார்ச் மாதம் திருமணம் நடந்தது.
ரஞ்சிதா தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். ரஞ்சிதாவின் கணவன் ஸ்டாலின் வீடும், வி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தந்தை குழந்தைவேல் வீடும் அருகருகே உள்ளது.
இதனால் ரஞ்சிதா அடிக்கடி தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். இதனை தந்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ரஞ்சிதா, தந்தை வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.