/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு வேலை வழங்க கோரி கர்ப்பிணி மனு
/
அரசு வேலை வழங்க கோரி கர்ப்பிணி மனு
ADDED : மார் 11, 2025 05:01 AM
கள்ளக்குறிச்சி : கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க கோரியும் கர்ப்பிணி பெண் குடும்பத்தினருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
சின்னசேலம் அடுத்த அம்மகளத்துாரை சேர்ந்த பழனிவேல் மனைவி ஐஸ்வர்யா, 25; என்ற கர்ப்பிணி பெண் தனது குடும்பத்தினருடன் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்திருந்தார். மனுவில் கூறியிருப்பதாவது:
கணவர் பழனிவேல் தனியார் துறையில் வேலை செய்து வந்தார். அவர் ஈட்டிய வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் நடந்த சாலை விபத்தில் கணவர் பழனிவேல் உயிரிழந்தார்.
குடும்பத்தினர் விருப்பப்படி கணவர் பழனிவேலின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளோம். கணவர் பழனிவேல் இல்லாததால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட் டுள்ளது. எனக்கு 2 குழந்தைகள் இருப்பதால் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும்.