/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
/
விநாயகர் சதுர்த்திக்கு சிலைகள் தயாரிப்பு தீவிரம்
ADDED : ஆக 23, 2024 12:13 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கான சிலைகள் குறைந்த விலையில், பல வடிவங்களில் விற்பனைக்கு தயாராக உள்ளது.
இது குறித்து, ஹிந்து முன்னணி மாவட்ட பொதுசெயலாளர் சக்திவேல் விடுத்துள்ள அறிக்கை:
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுதும் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்திய பின், ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைப்பது வழக்கம்.
இதற்காக கள்ளக்குறிச்சி ஹிந்து முன்னணி சார்பில் இவ்வாண்டு கள்ளக்குறிச்சி பகுதியில் பல்வேறு அளவுகளில் விநாயகர் சிலைகள் குறைந்த விலையில், விற்பனை செய்கின்றனர்.
ஒரு அடி முதல் 14 அடி வரை பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத கல்மாவு, வாட்டர் பெயிண்ட் உள்ளிட்ட மூலப்பொருட்கள் மூலமாக விநாயகர் சிலைகள் சேலம் ஏத்தாப்பூர் பகுதியை சேர்ந்த சிற்பி பிரசாந்த் செய்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கச்சிராயபாளையம் சாலையில் கடத்துார் பிரிவு ரோடு அருகே உள்ள கட்டடத்தில் இந்த 'மெகா' சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
சிலைகள் குறைந்த விலையில் ஆயிரம் ரூபாய் முதல் ரூ.24 ஆயிரம் வரையிலான விலைகளில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக வாங்கினால் சிலைகளை கொண்டு செல்வதற்கான வாகன வசதியும் இங்கு ஏற்பாடு செய்து தரப்படுகிறது.