/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
விலைவாசி உயர்வுதான் தி.மு.க.,வின் சாதனை: அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
/
விலைவாசி உயர்வுதான் தி.மு.க.,வின் சாதனை: அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
விலைவாசி உயர்வுதான் தி.மு.க.,வின் சாதனை: அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
விலைவாசி உயர்வுதான் தி.மு.க.,வின் சாதனை: அ.தி.மு.க., வேட்பாளர் பேச்சு
ADDED : ஏப் 04, 2024 11:45 PM

கள்ளக்குறிச்சி: ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரசாரத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவுக்கு நிர்வாகிகள், பெண்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடும் மாவட்ட செயலாளர் குமரகுரு, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, வேட்பாளர் குமரகுரு பேசியதாவது:
கடந்த 3 ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில், அரிசி, பத்திர பதிவு கட்டணம், சொத்து வரி, பால் என அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
குறிப்பாக, தாயுள்ளம் கொண்ட முன்னாள் முதல்வர் ஜெ., மகளிர் நலனுக்காக செயல்படுத்திய தாலிக்கு தங்கம், விலையில்லா மடிக்கணினி, மானிய விலையில் ஸ்கூட்டர் என அனைத்து திட்டங்களையும் தி.மு.க., முடக்கியது.
சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., வாக்குறுதியாக அறிவித்த நீட் தேர்வு ரத்து, சிலிண்டர் விலை குறைப்பு உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் உள்ளன. மக்களை ஏமாற்றும் தி.மு.க., ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, இரட்டைசிலை சின்னத்திற்கு ஓட்டளியுங்கள் என அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு பேசினார்.
மேலந்தல், மணலுார்பேட்டை, சித்தப்பட்டினம், முருக்கம்பாடி உட்பட பல்வேறு ஊர்களில் பிரசாரம் செய்தார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் கருணாகரன், அ.தி.மு.க., நகர செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் துரைராஜ், கதிர் தண்டபாணி, அருணகிரி, பழனி, சந்தோஷ், சேகர், தே.மு.தி.க., பழனிவேல் உட்பட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

