/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
/
ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி முப்பெரும் விழா
ADDED : பிப் 26, 2025 05:17 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், முப்பெரும் விழா நடந்தது.
வட்டார தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். செயலாளர் சம்சுதீன் வரவேற்றார்.
மாநில பொருளாளர் தியாகராஜன், செயற்குழு உறுப்பினர் சாந்தி, மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழச்செல்வி முன்னிலை வகித்தனர்.
பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சித்ராவிற்கு மாநில தலைவர் லட்சுமிபதி பொன்னாடை அணிவித்தார். பொதுச் செயலாளர் தாஸ் நினைவு பரிசு வழங்கி பேசினார்.
கல்வராயன்மலை, வடபாலப்பட்டு தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர் சாந்திக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது. கட்டட நிதி அளித்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
விழாவில் வட்டார செயலாளர்கள் திருக்கோவிலுர் ரவி, ரிஷிவந்தியம் பழனிசாமி, சின்னசேலம் அருள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வட்ட பொருளாளர் ஷாஜிதா நன்றி கூறினார்.