/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
/
பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை போட்டிகள்
ADDED : செப் 11, 2024 11:06 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பகுதியில் நேற்று பள்ளி மாணவ மாணவிகளுக்கு முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நேற்று முன்தினம் துவங்கியது. இப்போட்டிகள் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரி, தச்சூர் ஆக்ஸாலிஸ் பள்ளி, தியாகதுருகம் மற்றும் சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானங்களில் தொடர்ந்து நடத்தப்படுகிறது.
முதல்வர் கோப்பை போட்டிகள் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகிறது.
முதற்கட்டமாக தற்போது பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஹாக்கி, வாலிபால், செஸ், கிரிக்கெட், பாட்மிட்டன், கபடி, கோ-கோ, கேரம் உள்ளிட்ட போட்டிகள் நேற்று முதல் இரண்டு நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
போட்டிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் சுரேஷ் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள் பலர் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்று (12ம் தேதி) கால்பந்து, சிலம்பம் உள்ளிட்ட போட்டிகளும் நடக்கிறது.