/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊராட்சி பள்ளியில் பரிசளிப்பு விழா
/
ஊராட்சி பள்ளியில் பரிசளிப்பு விழா
ADDED : மார் 08, 2025 02:08 AM
சங்கராபுரம்: எஸ்.குளத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சங்கராபுரம் சங்கை தமிழ்ச்சங்கம் மற்றும் குறள் வீடு உறவுகள் இணைந்து நடத்திய, மாணவர் பரிசளிப்பு விழா நடந்தது.
இதில், அரையாண்டு தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் முன்று இடங்களை பிடித்த, மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்கை தமிழ்ச்சங்க தலைவர் சுப்பராயன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் வைத்யநாதன் வரவேற்றார். குறள் வீடு உறவுகள் அமைப்பின் தலைவர் பன்னீர்செல்வம், மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன், மதியழகன், சாதிக்பாஷா, லட்சுமிபதி வாழ்த்தி பேசினர்.