/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்ட சிறப்பு முகாம்

ADDED : ஆக 02, 2024 02:23 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் கடன் வசதி பெறும் திட்டத்திற்கான சிறப்பு முகாம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்கள், அசோக்குமார், மரிய ரவி ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி பேசுகையில், 'முகாமில் வேளாண் உட்கட்டமைப்பு நிதி திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்படும். 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீதம் வட்டி குறைப்பு வழங்கப்படும். 2 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட கடனாக இருந்தால், 2 கோடிக்கு மட்டும் 3 சதவீதம் வட்டிக் குறைப்பு வழங்கப்படும். கடன் தொகையை அதிகபட்சம் 7 ஆண்டுகளில் திருப்பி செலுத்த வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை), விஜயராகவன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ரஞ்சித், உதவி செயற் பொறியாளர் அழகுவேல், கூட்டுறவு இணைப் பதிவாளர் முருகேசன், தோட்டக்கலை உதவி இயக்குனர் முரளி, மாவட்ட தொழில் மைய உதவி பொறியாளர் சிவநாதன், வேளாண்மை அலுவலர்கள் அர்வின்ராஜ், ராஜ்குமார், தமிழ்வாணன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் பங்கேற்றனர்.