/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பென்ஷன் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
/
பென்ஷன் நல அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 08, 2024 11:26 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: குறைந்தபட்ச பென் ஷன் அனைவருக்கும் வழங்க வேண்டும். மூத்த குடிமக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ.பி.எஸ்., 95, பென்சனர் அமைப்பின் சார்பில் டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தை ஆதரித்து, திருக்கோவிலுாரில் பென்ஷன் நல அமைப்பு அமைப்பின் சார்பில் பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஏழுமலை தலைமை தாங்கினார். கோபாலகிருஷ் ணன் முன்னிலை வகித்தார். தர்மலிங்கம், அண்ணாமலை, பன்னீர்செல்வம், உதயகுமார், நாராயணன் உள்ளிட்ட பலரும் கலந்து பங்கேற்று பேசினர்.
ராஜாராம் நன்றி கூறினார்.