/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதயநிதி நிவாரணம் வழங்கல்
/
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதயநிதி நிவாரணம் வழங்கல்
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதயநிதி நிவாரணம் வழங்கல்
இறந்தவர்கள் குடும்பத்தினருக்கு உதயநிதி நிவாரணம் வழங்கல்
ADDED : ஜூன் 20, 2024 09:18 PM
கள்ளக்குறிச்சி: இறந்தவர்கள் குடும்பத்தினர் 29 பேருக்கு அமைச்சர் உதயநிதி தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில், விஷ சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி கருணாபுரம் டேனிஷ்மிஷன் பள்ளியில் நடந்தது.
அமைச்சர் உதயநிதி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 29 பேருக்கு தலா ரூபாய் 10 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, ஆறுதல் கூறினார். அப்போது அமைச்சர்கள் வேலு, சுப்ரமணியன், மாவட்ட செயலாளர்கள் வசந்தம்கார்த்திகேயன், உதயசூரியன், கலெக்டர், போலீசார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். தொடர்ந்து பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, அமைச்சர் வேலு மட்டுமே பேட்டி அளித்தார்.