/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
/
அரசு மகளிர் பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கல்
ADDED : ஆக 21, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில், இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கென்னடி தலைமை தாங்கினார். செயலாளர் கிரிராஜி முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை கீதா வரவேற்றார். பிளஸ் 1 மாணவிகள் 555 பேருக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக இயக்குனர்கள் முஸ்தபா, ரியாஸ் உசேன், சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.

