ADDED : ஆக 21, 2024 06:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம் : தியாகதுருகம் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் மாணவர்களுக்கு நலத் திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தியாகதுருகம் புகைப்பட கலைஞர்கள் நல சங்கம் சார்பில் உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டது. கவுரவ தலைவர் சாந்தகுமார் கணேசன் தலைமை தாங்கினார். தலைவர் இலியாஸ், செல்வகுமார் நாகராஜ், சித்திக், மாரி முன்னிலை வகித்தனர். தியாகதுருகம் ஆண்கள் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு நோட்டு பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
தியாகதுருகம் மற்றும் அதை சுற்றியுள்ள புகைப்பட கலைஞர்கள் பங்கேற்றனர்.

