/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிருஷ்ணா நகரில் உடைந்த 'கல்வெர்ட்' சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
/
கிருஷ்ணா நகரில் உடைந்த 'கல்வெர்ட்' சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணா நகரில் உடைந்த 'கல்வெர்ட்' சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
கிருஷ்ணா நகரில் உடைந்த 'கல்வெர்ட்' சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மே 24, 2024 06:04 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கிருஷ்ணாநகரில் உடைந்த நிலையில் உள்ள 'கல்வெர்ட்'டினை சரிசெய்திட நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சி 1வது வார்டு கிருஷ்ணாநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இங்கு கழிவுநீர் கால்வாய் மேற்புறத்தில், சாலைகள் பிரியும் பகுதியில் 'கல்வெர்ட் சிலாப்' அமைக்கப்பட்டுள்ளது. பழமை வாய்ந்த இந்த கல்வெர்ட் சிலாப் கடந்த சில மாதங்களுக்கு முன் உடைந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது.
இதனால் அவ்வழியாக செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மேலும், அப்பகுதியில் விளையாடும் சிறுவர்கள் கல்வெர்ட்டில் சிக்கி காயமடைய வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில் உடைந்துள்ள பகுதியில் செடிகள் போடப்பட்டுள்ளது. விபத்து ஏற்படுவதற்கு முன், உடைந்த கல்வெர்ட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.