/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
/
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை
ADDED : மார் 04, 2025 07:22 AM
அவசரத்திற்கு பயணிக்க முடியாத திருக்கோவிலுார் - விழுப்புரம் சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுாரில் இருந்து முகையூர், ஆயந்துார் வழியாக விழுப்புரம் செல்லும் சாலை 37 கி.மீ., துாரம் கொண்டது. இதில் திருக்கோவிலுாரில் இருந்து அரகண்டநல்லுாரை கடப்பதற்கே 30 நிமிடம் ஆகிறது. அந்த அளவிற்கு குறுகலான சாலையாக உள்ளது.
குறுகலான சாலையிலும் ஏராளமான ஆக்கிரமிப்புகள், ஸ்பீடு பிரேக், இத்தனையையும் கடந்து சென்றால் முகையூர், ஆயந்துார், மாம்பழப்பட்டு என மிக குறுகலான சாலையை கடப்பது அவ்வளவு எளிதல்ல.
திருக்கோவிலுாரில், மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், முழுமையாக செயல்படவில்லை. இதனால் முதலுதவி சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் போது பெரும்பாலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்குச் செல்லவே பெரும்பாலான நோயாளிகள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.
இவர்களை ஏற்றிக்கொண்டு தினசரி 15க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் இந்த சாலையில் பயணிக்க வேண்டியுள்ளது.
ஆபத்தான நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ்கள் குறுகலான இந்த சாலையில், குறிப்பிட்ட நேரத்திற்குள் மருத்துவமனை சென்றடைய முடியுமா என்பது கேள்விக்குறிதான். முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலையை நெடுஞ்சாலை துறை கண்டுகொள்ளாததற்கான காரணம் என்ன என தெரியவில்லை.
இச்சாலையின் பெரும்பாலான பகுதி திருக்கோவிலுார் தொகுதிக்குட்பட்டது. அதிக மேடு பள்ளங்களுடன் சிக்கலான இச்சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த தொகுதி எம்.எல்.ஏ., வும், வனத்துறை அமைச்சராகவும் இருக்கும் பொன்முடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.