ADDED : மே 09, 2026 03:20 PM

அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பொது விநியோக திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு வட்ட வழங்கல் அலுவலர் திருமலை தலைமை தாங்கினார். முதுநிலை வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், இளநிலை வருவாய் ஆய்வாளர் ராஜன் முன்னிலை வகித்தனர். ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், மொபைல் எண் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்ட 14 மனுக்கள் பொது மக்களிடமிருந்து பெறப்பட்டது. அனைத்து மனுக்கள் மீதும் உடனடி தீர்வு காணப்பட்டதாக வட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்தார்.வட்ட பொறியாளர் அய்யனார் உட்பட பலர் பங்கேற்றனர்.
