ADDED : ஜூலை 10, 2026 03:20 PM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு முகாம் இன்று நடக்கிறது.
பொது விநியோக திட்டம் சார்பில் பொது மக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் இன்று 11ம் தேதி காலை சங்கராபுரம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் நடக்கிறது. வட்ட வழங்கல் அலுவலர் திருமலை தலைமை தாங்குகிறார். முகாமில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் போன்றவை குறித்து பொது மக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்து நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
