/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா
/
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா
பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா
ADDED : செப் 03, 2024 11:42 PM

கள்ளக்குறிச்சி : ரோடுமாமாந்துாரில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம்., மையம் திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த ரோடுமாமாந்துாரில் நடந்த நிகழ்ச்சிக்கு பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் அருண் தலைமை தாங்கினார். உதவி மேலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக ஓய்வு பெற்ற முன்னாள் மேலாளர் சொக்கன் பங்கேற்று, குளிரூட்டப்பட்ட ஏ.டி.எம்., மையத்தை திறந்து வைத்தார்.
தொடர்ந்து, வங்கி சார்ந்த சேவைகள் மற்றும் 73 பைசா வட்டியில், 10 நிமிடத்தில் தங்க நகைக்கடன் வழங்கப்படுவது குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் வங்கி பணியாளர்கள் மணிகண்டன், ஜெயக்குமார், காட்வின், வஜித், மணிபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.