/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் முப்பெரும் விழா
ADDED : ஆக 18, 2024 04:48 AM

கள்ளக்குறிச்சி, : ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் மாவட்ட கம்பன் கழகம், கல்லைத்தமிழ்ச் சங்கம் மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கம்பன் கழக தலைவர் ஹாஜி சுலைமான் தலைமை தாங்கினார். கல்வி நிறுவனங்களின் தலைவர் மகுடமுடி விழாவை தொடங்கி வைத்தார். சங்க துணைத் தலைவர்கள் மணியன், கோவிந்தராஜன், ஒருங்கிணைப்பாளர் ஜெயபிரகாஷ், வழக்கறிஞர் ரங்கராஜன், கஸ்துாரி இளையாழ்வார், கலைமகள் காயத்ரி, இந்திராஜ் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர், துறைத்தலைவி பிரவீனா வாழ்த்திப் பேசினர்.
சிறப்பு அழைப்பாளர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜாராமன் பேசினார். தொடர்ந்து, பொதுத்தேர்வில் தமிழ் பாடத்தில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கும், மாவட்ட அளவில் நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. கல்லைத் தமிழ்ச் சங்க பொருளாளர் அம்பேத்கர் நன்றி கூறினார்.

