/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலீஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீர்
/
போலீஸ் நிலையத்தில் தேங்கிய மழைநீர்
ADDED : மார் 12, 2025 10:14 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உளுந்துார்பேட்டை; உளுந்துார்பேட்டை போலீஸ் நிலையத்தில் கட்டமைப்பை மேம்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
உளுந்துார்பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் நீண்ட நேரம் மழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக மாறின. இந்நிலையில் உளுந்துார்பேட்டை, போலீஸ் நிலையத்திற்குள் மழைநீர் புகுந்தது. இதனால் அங்கு பணிபுரியும் போலீசார் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல புகார் கொடுக்க வந்த பொதுமக்களும் சிரமத்திற்குள்ளாகினர்.
அந்த போலீஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காதவாறு கட்டமைப்பு வசதியை மேம்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.