/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரமணா மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
/
ரமணா மழலையர் பள்ளி பட்டமளிப்பு விழா
ADDED : மார் 25, 2024 05:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த காட்டுசெல்லுார் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளி மழலையர் மாணவர்களுக்கு 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார் அடுத்த காட்டுச்செல்லுார் ஸ்ரீ ரமணா பப்ளிக் மேல்நிலைப் பள்ளியில், மழலையர் பிரிவு, முதுநிலை மாணவர்களுக்கு 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி முதல்வர் கீதா வரவேற்றார்.
தாளாளர் பாஸ்கரன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

