/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
/
போக்குவரத்து போலீசார் நியமிக்க கோரிக்கை
ADDED : ஏப் 23, 2024 06:32 AM
சங்ககராபுரம: சங்கராபுரத்திற்கு போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சங்கராபுரம் நகரத்தைச் சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் இருந்து தினமும், அத்தியாவசிய தேவைக்கு ஏராளமானோர் சங்கராபுரம் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தங்கள் இரு சக்கர வாகனத்தை கடையின் முன் தாறுமாறாக நிறுத்திச் செல்கின்றனர். இதனால், மேலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிடைகின்றனர்.
இதுபோன்ற சமயங்களில் போக்குவரத்தை சரி செய்ய போதிய போக்குவரத்து போலீசார் இன்றி போலீசார் திணறி வருகின்றனர். எனவே, சங்கராபுரத்திற்கு என தனியாக போக்குவரத்து போலீசாரை நியமிக்க எஸ்.பி., உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

