/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்க கோரிக்கை
/
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்க கோரிக்கை
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்க கோரிக்கை
ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் வசதி வழங்க கோரிக்கை
ADDED : ஜூலை 29, 2024 05:10 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெறுவதை நடைமுறைப்படுத்திட நுகர்வோர் அமைப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
கள்ளக்குறிச்சி கோட்ட அளவிலான பொது விநியோக திட்டம் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நுகர்வோர் அமைப்பினர் பலர் பங்கேற்று பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.
அதில் கள்ளக்குறிச்சி ரேஷன் கடைகளில் டிஜிட்டல் முறையில் பணம் பெற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டும்.
நீர் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மக்களின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கோட்டத்தில் வி.ஏ.ஓ.,க்கள், கிராம ஊழியர்கள் அனைவரும் பணி புரியும் இடங்களிலேயே தங்கி பணியாற்ற வேண்டும்.
கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும். உணவகங்கள், தேநீர் கடைகளில் உணவுப்பாதுகாப்பு துறையினர் ஆய்வு நடத்திட வேண்டும்.
நகராட்சி பகுதிகளான மந்தைவெளி, காய்கறி மார்க்கெட், சுந்தர விநாயகர் கோவில் தெரு, ராஜா நகர் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காந்தி ரோடு நீர் வழிப்புறம்போக்கு ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படாமல் உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து நுகர்வோர்களின் கோரிக்கை மற்றும் புகார்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் நடராஜ், குடிமைப்பொருள் தாசில்தார் ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள், அருண் கென்னடி, சுப்ரமணியன் உள்ளிட்ட நுகர்வோர் அமைப்பினர், அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் செல்வக்குமார் பங்கேற்றனர்.