/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஐந்து ஆண்டு பதவிக்காலம் முடியாத ஊராட்சிகளை கலைத்தால் வழக்கு தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம்

ADDED : மே 27, 2024 06:29 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தாலுகா ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் ஜெயசங்கர் தலைமை தாங்கினார். செயலாளர் அய்யாதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் சின்னசாமி வரவேற்றார். 40க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், தமிழகத்தில் 27 மாவட்டங்களில் உள்ள ஊராட்சி அமைப்புகளின் 5 ஆண்டுகள் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிகிறது.
ஆனால் மற்ற 9 மாவட்டங்களில் ஊராட்சி அமைப்புகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் தான் ஆகியுள்ளது.
ஆனால் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி, 5 ஆண்டுகள் பதவிக்காலம் இன்னமும் முடிவடையாத 9 மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளையும் ஒருங்கே கலைத்துவிட்டு, அனைவருக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தமிழக அரசு இந்த முயற்சியை கைவிட வேண்டும். இல்லையெனில், 9 மாவட்ட ஊராட்சி அமைப்புகள் சார்பில் நீதிமன்ற வழக்கு தொடர்வோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.