/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் வருவாய் தீர்ப்பாயம்
/
சின்னசேலத்தில் வருவாய் தீர்ப்பாயம்
ADDED : ஜூன் 14, 2024 07:07 AM

சின்னசேலம்: சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் வடக்கனந்தல் குறுவட்ட பகுதிகளுக்கான வருவாய் தீர்ப்பாயம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டரின் நேர்முக உதவியாளர் ரமேஷ் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், குடிமை பொருள் தாசில்தார் கமலம் ஆகியோர் வடக்கனந்தல் குறுவட்டத்தை சேர்ந்த 8 கிராம மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
பெறப்பட்ட 62 மனுக்களில் 4 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 58 மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
ஆர்.ஐ.,க்கள் சின்னசேலம் உமா மகேஸ்வரி, வடக்கனந்தல் பாபு கணபதி மற்றும் வி.ஏ.ஓ.,க்கள், அரசுத்துறை அலுவலகர்கள் இந்த வருவாய் தீர்ப்பாயத்திற்கான பணிகளை மேற்கொண்டனர்.
தொடர்ந்து இன்று வடக்கனந்தல் குறுவட்டத்தை சேர்ந்த பால்ராம்பட்டு, மாத்துார், வடக்கனந்தல் கிழக்கு, மேற்கு, கச்சிராயபாளையம், பரிகம், ஏர்வாய்ப்பட்டினம், மல்லியப்பாடி, பொட்டியம் பகுதிகளுக்கான மனுக்கள் பெறப்படுகின்றன.
இப்பகுதி மக்கள் தங்களுக்கான கோரிக்கைகளை வருவாய்த்தீர்ப்பாயத்தில் வழங்கி உடனடி தீர்வு காணலாம் என தெரிவித்தனர்.