/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
/
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து துறை அலுவலர்களுடன் ஆய்வு
ADDED : ஆக 07, 2024 06:29 AM

கள்ளக்குறிச்ச : கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தர்மேந்திர பிரதாப் யாதவ் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, வேளாண்மை உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு, முடிவுற்ற திட்ட பணிகள், நடைபெறும் பணிகள், நலத்திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்கள் தீர்வு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கேட்டறிந்து ஆய்வு செய்தார். ஆய்வில் தகுதியுள்ள பயனாளிளுக்கு முதியோர் உதவி தொகை, இலவச வீடு வழங்குதல், பட்டா வழங்குதல் உள்ளிட்ட அத்தியாவசிய கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உட்பட அனைத்துதுறை மாவட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு மருத்துவ சேவைகள் புரிந்த செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பெண் சுகாதார தன்னார்வலர்கள் போன்ற களப்பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாராட்டு சான்றிதழ் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் வழங்கினார். அப்போது மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.