ADDED : ஜூலை 21, 2024 07:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் நடந்தது.
பகண்டை கூட்ரோட்டில் உள்ள ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமி சுப்ரமணியன் தலைமை தாங்கினார், துணைச் சேர்மன் சென்னம்மாள் அண்ணாதுரை, மாவட்ட குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ், அமிர்தம் ராஜேந்திரன், பி.டி.ஓ., நடராஜன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., சந்திரசேகரன் வரவேற்றார். அலுவலக உதவியாளர் பிரபாகரன் ஒன்றிய தீர்மானங்களை வாசித்தார்.
கூட்டத்தில் வளர்ச்சி பணிகள் குறித்து 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய உறுப்பினர்கள், பொறியாளர்கள் பங்கேற்றனர். துணை பி.டி.ஓ., செந்தில்குமார் நன்றி கூறினார்.