/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வாழ்நெறி அரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் வாழ்நெறி அரங்கம்
ADDED : ஆக 31, 2024 03:37 AM

கள்ளக்குறிச்சி: ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் தமிழ்த்துறையின் பாவாணர் பைந்தமிழ் மன்றம் சார்பில் மாணவர் மனதில் வள்ளுவம் என்ற தலைப்பில் வாழ்நெறி அரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி தலைமை தாங்கினார். தாளாளர் குமார் முன்னிலை வகித்தார். நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் முதல்வர் உரையாற்றினார். தமிழ்த்துறை தலைவர் பிரவீனா வரவேற்றார். செயலாளர் கோவிந்தராஜூ, துணை முதல்வர் ஜான்விக்டர் வாழ்த்தி பேசினர்.
வேலுார் திருவள்ளூவர் பல்கலைக்கழக கவுரவ விரிவுரையாளர் ரவிச்சந்திரன் சுருக்க உரையாற்றினார்.
சிறப்பு அழைப்பாளராக கடலுார் சுங்கத்துறை உதவி ஆணையர் பாவலர் சண்முகசுந்தரம் மாணவர் மனதில் வள்ளுவம் தலைப்பில் திருக்குறலில் உள்ள வாழ்வியல் கருத்துகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.