/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி: சேர்மன் பெருமிதம்
/
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி: சேர்மன் பெருமிதம்
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி: சேர்மன் பெருமிதம்
பெற்றோர்களின் கனவை நனவாக்கும் ஆர்.கே.எஸ்., கல்லுாரி: சேர்மன் பெருமிதம்
ADDED : ஜூன் 01, 2024 06:19 AM

கள்ளக்குறிச்சி, : வேலைவாய்ப்பு முகாம் நடத்தி, கல்லுாரி படிப்பினை முடிக்கும் மாணவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பு பெற்றுத்தந்து பெற்றோர்களின் கனவை நனவாக்கும் கல்லுாரியாக ஆர்.கே.எஸ்., கல்லுாரி உள்ளது என சேர்மன் மகுடமுடி கூறினார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
கல்விச் சேவையில் தனியாத ஆர்வம் கொண்ட டாக்டர்கள், கல்வியாளர்களால் விழுப்புரம் மாவட்டத்திலேயே முதலாவதாக துவங்கப்பட்ட டாக்டர் ஆர்.கே.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி 25 ஏக்கர் பரப்பளவில், வெள்ளி விழா கண்டுள்ளது.
மாவட்டத்தில் 'நாக்' தரச்சான்று பெற்ற ஒரே இருபாலர் கல்லுாரியில், 9 இளங்கலை, 8 முதுகலை, 2 இளமுனைவர், 1 முனைவர் பாடப்பிரிவுகள் உள்ளன. இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர்.
மத்திய, மாநில அரசின் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் வாரம் தோறும் கட்டணமில்லா பயிற்சி அளிக்கப்படுகிறது.
தனித்திறனை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி, கருத்தரங்குகள் நடத்தப்படுகிறது. வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவதில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. அரசு கல்வி உதவித்தொகை மாணவர்களுக்கு பெற்று தரப்படுகிறது. மேலும், நிர்வாக குழு சார்பில் ஏழை, எளிய மாணவர்களுக்கு மதிப்பெண் மற்றும் விளையாட்டு அடிப்படையில் கல்வி உதவி தொகையும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு முழுபேருந்து உதவி தொகையும் வழங்கப்படுகிறது.
மாணவர்கள், மாணவிகளுக்கு தனித் தனி விடுதிகள் குறைந்த கட்டணத்தில் சுகாதாரமான முறையில் சிறந்த கட்டமைப்போடு பராமரிக்கப்படுகிறது. சத்துள்ள உணவு, மாலை நேர சிற்றுண்டி, சுண்டல், பால் போன்றவை வழங்கப்படுகிறது.
இதுதவிர ஆர்.கே.எஸ்., கல்வியியல் கல்லுாரி, மாஸ்டர்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இன்ஸ்டிடியூட் ஆப் ெஹல்த் சயின்ஸ் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கருத்தரங்குகள் மூலம் பாடம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு சேர்மன் மகுடமுடி கூறினார்.