ADDED : மார் 12, 2025 06:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், : தியாகதுருகத்தில், தினமலர் செய்த எதிரொலியாக, சாலையோர பள்ளம் சீரமைக்கப்பட்டது.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகில், சீரணி அரங்கம் எதிரில், கடந்த ஓராண்டுக்கு முன், குடிநீர் குழாய் சீரமைக்க பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் அதற்கு பிறகு அந்த பள்ளம் சரி செய்யப்படவில்லை.
இதனால் வாகன ஓட்டிகள், பாதிப்பிற்குள்ளாகி வந்தனர். இது குறித்து நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, பேரூராட்சி ஊழியர்கள் நேற்று காலை, சாலையோர பள்ளத்தை சீரமைத்து சமன்படுத்தினர். இதனால் வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.