ADDED : ஆக 25, 2024 06:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே கூரை வீடு தீ விபத்தில் எரிந்து சேதமானது.
சங்கராபுரம் அடுத்த ராமராஜாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன்கள் கலைமணி, அபிலாஷ்.
இருவரும் நேற்று வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்குச் சென்றனர். அப்போது அவர்களது கூரை வீடு திடீரென தீ பிடித்து எரிந்தது.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு அலுவலர் (பொறுப்பு) ரமேஷ்குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்டகள் எரிந்து சேதமானது.
சங்கராபுரம் போலீசார் தீவிபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.