/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாரதி மகளிர் கல்லுாரியில் ரோட்டரி சங்க ரத்த தான முகாம்
/
பாரதி மகளிர் கல்லுாரியில் ரோட்டரி சங்க ரத்த தான முகாம்
பாரதி மகளிர் கல்லுாரியில் ரோட்டரி சங்க ரத்த தான முகாம்
பாரதி மகளிர் கல்லுாரியில் ரோட்டரி சங்க ரத்த தான முகாம்
ADDED : ஜூலை 12, 2024 06:35 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ரோட்டரி சங்கம் மற்றும் பாரதி மகளிர் கலைக் கல்லுாரி இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர்.
மேலுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துடன் ரோட்டரி சங்கம் மற்றும் இந்திலி பாரதி மகளிர் கல்லுாரி இணைந்து ரத்த தான முகாம் நடத்தினர். கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு ரோட்டரி சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கி துவக்கினார். பாரதி கல்வி நிறுவன தாளாளர் கந்தசாமி, கல்லுாரி முதல்வர் சுபா முன்னிலை வகித்தனர்.
செயலாளர் சிவக்குமார் வரவேற்றார். ரோட்டரி மண்டல துணை ஆளுநர் ராமலிங்கம், முன்னாள் தலைவர் இமானுவேல் சசிகுமார், இயக்குனர் அம்பேத்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். டாக்டர்கள் விஜயகுமார்,பாலதண்டாயுதபாணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி ஆகியோர் ரத்த தான பணிகளை ஒருங்கிணைத்தனர்.
முகாமில் பங்கேற்ற 50 மாணவிகள் 50 யூனிட் ரத்தத்தை தானமாக வழங்கினர்.