/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பஸ் பயணியிடம் இருந்து ரூ.3.98 லட்சம் பறிமுதல்
/
பஸ் பயணியிடம் இருந்து ரூ.3.98 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 30, 2024 06:17 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அருகே அரசு பஸ்சில் நடத்திய சோதனையில் 3.98 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
திருக்கோவிலுார் சட்டசபை தொகுதி, தேர்தல் பறக்கும் படையைச் சேர்ந்த, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர், திருவண்ணாமலை - விழுப்புரம் சாலையில் அடுக்கத்தில் நேற்று மாலை 5:00 மணி அளவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
திருவண்ணாமலையிலிருந்து - விழுப்புரம் நோக்கிச்சென்ற அரசு பஸ்சை சோதனை செய்ததில், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த கலிமேடு கிராமத்தைச் சேர்ந்த சண்முகவேல் மகன் பிரகாஷ், 32; என்ற பயணியிடம் இருந்து 3 லட்சத்து 98 ஆயிரத்து 900 ரூபாய் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
இதற்கு தகுந்த ஆவணங்கள் ஏதும் இல்லாததால் திருக்கோவிலுார் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் கிருஷ்ணதாசிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

