/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிறுமிகளை கடத்தியதாக வதந்தி இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
/
சிறுமிகளை கடத்தியதாக வதந்தி இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
சிறுமிகளை கடத்தியதாக வதந்தி இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
சிறுமிகளை கடத்தியதாக வதந்தி இருவருக்கு பொதுமக்கள் தர்மஅடி
ADDED : ஆக 14, 2024 07:22 AM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே பள்ளி சிறுமிகளை கடத்தியதாக பரவிய வதந்தியை அடுத்து இருவரை பிடித்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்துார்பேட்டை பள்ளியில் 1 மற்றும் 5ம் வகுப்பு படிக்கும் இரண்டு சிறுமிகள் நேற்று மாலை கடத்தப்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதி மக்கள், பள்ளிக்கு அருகே பைக் ஷாேரூமில் உள்ள கண்காணிப்பு கேமரா கட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பைக் ஷாேரூமில் பைக்கை சர்வீஸ் விட்டு எடுத்துச் சென்ற இரு வாலிபர்கள் சிறுமிகளை கடத்திச் சென்றதாக பொதுமக்கள் சிலர் தெரிவித்தனர். அதையடுத்து, பைக் ஷாேரூமில் இருந்த பணியாளர்களிடம் அவர்களின் மொபைல் எண்ணை வாங்கி, போன் செய்து வரவழைத்து, இருவரையும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உளுந்துார்பேட்டை போலீசார், இருவரையும் மீட்டு ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
இந்நிலையில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சிறுமிகளில் ஒருவர் தனது வாட்டர் பாட்டிலை பள்ளியில் மறந்து வைத்துச் சென்றதால் அதனை திரும்ப எடுப்பதற்கு இருவரும் மீண்டும் பள்ளிக்கு சென்றுள்ளனர். அவர்களை தெரிந்த நபர் ஒருவர் பைக்கில் அழைத்து சென்று வீட்டில் விட்டுள்ளார்.
இதனிடையே சிறுமிகளை யாரோ பைக்கில் கடத்திச் சென்றதாக தகவல் பரவியதால், பைக் ஷாேரூமில் பைக்கை சர்வீஸ் விட்டு எடுத்துச் சென்ற வாலிபர்களை பிடித்து பொது மக்கள் தர்ம அடி கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.