/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
/
ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ஊரக வளர்ச்சி துறை வளர்ச்சி திட்ட பணிகள்: கலெக்டர் ஆய்வு
ADDED : ஆக 08, 2024 11:29 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதில், கனியாமூர் காலனியில் அரசு பண்ணை குட்டையில் ரூ.13 லட்சத்தில் மரம் வளர்த்தல் மற்றும் குளம் துார்வாருதல் பணி, கலைஞரின் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கப்பட்டு பணி துவங்க உள்ள இல்லத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து அம்மையகரம் சமத்துவபுரத்தில் மகளிர் சுய உதவிக்குழுவின் சார்பில் ரூ.4.34 லட்சம் மதிப்பீட்டில் மரக்கன்றுகள் வளர்த்து விற்பனை செய்யும் பணியை ஆய்வு செய்தார்.
அப்போது நிலுவையில் உள்ள திட்ட பணிகளை விரைவாக துவக்கி பொதுமக்களுக்கு தடையின்றி பணி வழங்க வேண்டும். புதியதாக நடப்படும் மரக்கன்றுகளை நாள்தோறும் நீர் ஊற்றி பராமரிக்க வேண்டும்.
தொடர்ந்து தரமான பொருட்களை கொண்டு கனவு இல்ல கட்டுமான பணிகள் உள்ளிட்ட பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது பி.டி.ஓ.,க்கள் செந்தில்முருகன், ரவிசங்கர் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.