/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
/
தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 08, 2024 05:12 AM
கள்ளக்குறிச்சி: ஆதிதிராவிடர் நலத்துறையினர் கீழ் செயல்படும் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, பட்டதாரி ஆசிரியர் நிலையில் 9 காலி பணியிடங்கள், இடை நிலை ஆசிரியர் நிலையில் 26 காலிப்பணியிடங்கள் உள்ளன. பட்டதாரி ஆசிரியருக்கு 15 ஆயிரம் ரூபாய், இடைநிலை ஆசிரியருக்கு 12 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்தில் பட்டியலினத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பங்களை உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் இன்று 8ம் தேதி மாலை 5:00 மணிக்குள் கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.