/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மதுபாட்டில் விற்பனை; 4 பேர் மீது வழக்கு
/
மதுபாட்டில் விற்பனை; 4 பேர் மீது வழக்கு
ADDED : ஏப் 18, 2024 11:13 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் சாராயம், மதுபாட்டில் விற்ற 4 நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பெருவங்கூர் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த கணேசன் மகன் ரங்கநாதன்,54; என்பவர் மீது வழக்கு பதிந்து, 7 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், கரியலுார் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மேற்கொண்ட ரோந்து பணியின் போது, உப்பூரில் சாராயம் விற்ற தலைவாசலை சேர்ந்த மது மகன் தியாகராஜன் மீது வழக்கு பதிந்து, 10 லிட்., சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
மேலும், சின்னசேலம் பகுதியில் போலீசார் மேற்கொண்ட ரோந்து பணியின் போது பெரியசிறுவத்துார் ஏரி அருகே மதுபாட்டில் விற்ற கந்தசாமி மகன் வசகமூர்த்தி என்பவர் மீது வழக்கு பதிந்து, 15 மதுபாட்டில்களையும், தொட்டியம் டாஸ்மாக் கடை அருகே மதுபாட்டில் விற்ற ராமசாமி மகன் வடிவேல் மீது வழக்கு பதிந்து, ஒரு மதுபாட்டிலையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

