
சின்னசேலம்; சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த சம்வஸ்ரோஷக பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம், கடைவீதி, கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் கடந்தாண்டு நடந்தது. ஓராண்டு நிறைவு பெற்றதையடுத்து, கடந்த இருதினங்களாக, சம்வஸ்ரோஷக பூஜை நடந்தது. இதையொட்டி, விக்னேஸ்வர பூஜை, அனுஞ்க் பூஜை, பகவத் ஹீரோ, கலச ஸ்தாபனம், லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை, துர்கா பூஜை, கணபதி, நவக்கிரக மற்றும் பரிவார ஹோமங்கள், பூர்ணாகுதி, வேதபாரணை உபச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகள் நடந்தன. தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர் அம்மனுக்கு
முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும் கலச தீர்த்தம், மாவிளக்கு பூஜை நடந்தது. பெண்கள் கும்மி, கோலாட்டத்துடன் நடனமாடினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிர்வாகத்தலைவர் ரவீந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்தனர்.