/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு
/
சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழு
ADDED : ஆக 04, 2024 04:32 AM
கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு மாநில பணியாளர் சிக்கன நாணய சங்க ஊழியர் கூட்டமைப் பின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடந்தது.
கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார்.
மாநில தலைவர் சம்பத், துணைத் தலைவர் தாஸ், ராஜேந்திரன், தேவேந்திரன், மகளிரணி செயலாளர் சித்ராதேவி முன்னிலை வகித்தனர். முத்துசாமி வரவேற்றார்.
கூட்டத்தில், அரசு ஊழியர்களுக்கு இணையான அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைபடி, மலைவாழ்படி உள்ளிட்ட பணப்பலன்கள் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு கிடைத்திடும் வகையில் ஊதிய ஆணை வழங்க வேண்டும்.
பணியில் சேர்ந்து 10 ஆண்டு முடித்தவர்களுக்கு தேர்வு நிலையும், 20 ஆண்டு முடித்தவர்களுக்கு சிறப்பு நிலையும் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாவட்ட பொருளா ளர் கண்ணன் நன்றி கூறினார்.