ADDED : ஜூலை 22, 2024 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் எஸ்.பி., திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருக்கோவிலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடடிக்கை எடுப்பதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு 7:00 மணி அளவில் எஸ்.பி., ரஜத் சதுர்வேதி திடீரென மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். எஸ்.பி.,யின் திடீர் ஆய்வு மகளிர் போலீசார் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.