நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த வட செட்டியந்தலில், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி ஆண்டு விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் ஜானகி தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி வரவேற்றார். துணைத் தலைவர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுகளுக்கு ஓய்வு பெற்ற அஞ்சல் அதிகாரி கந்தசாமி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் மும்தாஜ் பரிசு வழங்கி, பாராட்டினர். ஆசிரியர் சூசைராஜ் நன்றி கூறினார்.