
திருக்கோவிலுார்; திருக்கோவிலூர் அடுத்த வடமருதூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், நுாற்றாண்டு விழா, புதிய வகுப்பறை திறப்பு, நுாற்றாண்டு நினைவு வாயில் திறப்பு, திருவள்ளுவர் சிலை திறப்பு, பள்ளி ஆண்டு விழா என ஐம்பெரும் விழா நடந்தது. மாவட்ட கல்வி அலுவலர் ஜோதிமணி வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை சேர்மன் தங்கம் முன்னிலை வகித்தார். சப் கலெக்டர் ஆனந்த் குமார் சிங், அண்ணியூர் சிவா எம்.எல்.ஏ., வட்டார கல்வி அலுவலர்கள் முரளி கிருஷ்ணன், கஜேந்திரன், ஊராட்சி தலைவர் மலர்கொடி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயபிரகலாதன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் ராகினி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் சந்தியாகு சிங்கராயன் வாழ்த்தி பேசினர்.
அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பள்ளியின் நூற்றாண்டு நினைவு வளைவு, புதிய வகுப்பறை கட்டிடம், திருவள்ளுவர் சிலைகளை திறந்து வைத்து, மாணவர் சேர்க்கையை துவக்கி வைத்தார்.
பள்ளிக்கு நன்கொடை வழங்கிய முன்னாள் மாணவர்கள் லட்சுமணன், பழனி, மாயவன், சரவணன், ராயல், பாலா, குமார் ஆகியோரை பள்ளி நிர்வாகம் பாராட்டியது. தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் குமுதவல்லி நன்றி கூறினார்.