/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி கல்வித்துறை கலைத் திருவிழா
/
பள்ளி கல்வித்துறை கலைத் திருவிழா
ADDED : ஆக 25, 2024 06:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கோட்டக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கலைத் திருவிழா நடந்தது.
கல்வித்துறையின் கலைத் திருவிழா மற்றும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நடந்த விழாவில், மாணவர்களின் மாறுவேட போட்டிகள் நடந்தது. மாணவர்கள் மாறுவேடம் அணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பள்ளி தலைமை ஆசிரியை மகாலட்சுமி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு உதவி ஆசிரியர் வினோத் பரிசு வழங்கி பாராட்டினார்.

