/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்
/
பள்ளி மேலாண்மைக்குழு விழிப்புணர்வு கூட்டம்
ADDED : ஆக 05, 2024 12:30 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மேலாண்மைக்குழு மறு கட்டமைப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பள்ளி தலைமை ஆசிரியர் கலாபன் தலைமை தாங்கினார். தற்போது உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய மேலாண்மை குழு தேர்தல் வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.
இதில், புதிதாக 16 முதல் 18 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குள் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிக்கு தேர்தல் நடைபெறும். மேலும், புதிதாக தேர்வு செய்யப்படும் மேலாண்மை குழு உறுப்பினர்களின் தகுதிகள், பணிகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.