ADDED : பிப் 28, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தையொட்டி, 10 ம் வகுப்பு மாணவியருக்கு, அறிவியல் கோலப்போட்டி நடந்தது.
போட்டியில், அறிவியல் தொடர்பான நரம்பு செல், மனித மூளை, இதயம், டி.என்.ஏ., தாவர தண்டு மற்றும் குறுக்கு வெட்டு தோற்றம், குழந்தை கருவின் வளர்ச்சி நிலைகள் உள்ளிட்ட கோலங்கள் இடம்பெற்றன.
தொடர்ந்து சி.இ.ஓ., கார்த்திகா, தலைமையாசிரியர் கீதா உள்ளிட்டோர், கோலங்களை பார்வையிட்டு மாணவியரை பாராட்டினர்.